Kalvi Valarchi Naal-July 15 , Kamaraj Birthday and Fancy dress competition and elocution
August 1, 2024On our Beloved Founder’s Birthday (23.10.24)
October 23, 2024Food was contributed by our executive director at Theni District for our founder’s second memorial day By Mr.Jayaraj Jesuadian.
திரு MPR ஏசடியான் (Malai Murasu Chief Editor & Founder Jessie Mat High school)அவர்களின் இரண்டாம் ஆண்டின் நினைவு நாள் குடும்பத்தினர்களுடன் சந்திப்பு
நாள் 17-10-24
:இடம்: ஜெசி மெட்ரிகுலேஷன் பள்ளி புத்தூர்
முன்னாள் மாலை முரசு தலைமை ஆசிரியரும் ,புத்தூர் ஜெஸ்ஸி மெட்ரிகுலேஷன் பள்ளியின் ஸ்தாபகரும் ,கிறிஸ்துவ சிறுபான்மை இயக்கத்தின் முன்னோடி தலைவர்களில் ஒருவருமான திரு MPR ஏதடியான் அவர்களின் இரண்டாம் நினைவு நாளை முன்னிட்டு குடும்பத்தின் மக்களை சந்தித்து ஜெபித்து .வந்தேன். திரு MPR ஏசடியான் அவர்கள் பத்திரிக்கை துறையில் பணியாற்றி பின்பு கல்விப் பணியில் அடி எடுத்து வைத்து ஜெஸ்ஸி மெட்ரிகுலேஷன் பள்ளியை துவக்கினார்கள் மேலும் கிறிஸ்தவ சிறுபான்மை இயக்கத்தின் முன்னோடி தலைவராகவும் காலம் சென்ற பேராயர் எஸ்ரா சற்குணம் மற்றும் விஜி சந்தோஷம் ஆகியோரின் மிக நெருங்கிய நண்பரும் ஆவார்கள்திரு. ஏசடியான் அய்யா அவர்களை நீண்ட நாட்களாக நான் அறிவேன் அவர் ஒரு பன்முக வித்தகர் என்று சொன்னால் அது மிகையாகாது .”தலை கேட்ட கதை “யோவான் ஸ்நானகனின் வாழ்க்கை வரலாற்றை நாட்டிய நாடகமாக தயாரித்து திருச்சி ஒய் எம் சி ஏ மைதானத்தில் அரங்கேற்றிய போதுதான் அவர்களை முதன் முதலாவதாக சந்தித்தேன்.அவர் கவிஞர் , நாடக ஆசிரியர் போன்ற பல அருட்கொடைகளுக்கு சொந்தக்காரர் ஜெஸ்ஸி மெட்ரிகுலேஷன் பள்ளியை துவக்கி கற்பதில் பின்தங்கி உள்ள மாணவ மாணவிகளுக்கு சிறப்பு பயிற்சி அளித்து அவர்களை தேர்வில் வெற்றி பெற செய்வது அவருடைய தனி திறமையாகும் .திருச்சி சகல பரிசுத்தர் ஆலயத்தில் நான் குருவானவராக பணியாற்றின பொழுது அந்த ஆலயத்தின் அங்கத்தினராக இருந்த திரு ஏசடியான் அவர்கள் குடும்பத்தினர் எங்கள் மீது அதிக நட்பு பாராட்டினார்கள் . நாளைய தினம் (28-10-24)ஐயா அவர்களின் இரண்டாவது நினைவு தினம் நான் வெளியூரில் ஒரு நிகழ்ச்சிக்கு செல்வதால் இன்று மாலை குடும்பத்தினரை சந்தித்தேன்.ஐயா மறைவுக்குப் பின் அவருடைய மனைவி திருமதி ஸ்டெல்லா ஏசடியான் ஐயாவை போன்றே மிகவும் ஒப்படைப்புடன் கணவர் விட்டுச் சென்ற கல்விப் பணியை மிக நேர்த்தியாக நடத்தி வருகிறார்கள் . அம்மா அவர்களை சந்தித்து சில நினைவுகளை பகிர்ந்து கொண்டு குடும்பத்தின் மக்களுக்காக இறை வேண்டுதல் செய்தேன் .திரு ஏசடியான் அவர்களுக்கு இரண்டு மகன்கள் திரு ஜெயராஜ் ஏசடியான் ,மற்றும் திரு சாமுவேல் ஏசடியான் ஆகியோர் திருமணமாகி குடும்பத்துடன் ஆஸ்திரேலிய நாட்டில் வசித்து வருகிறார்கள் அவருடைய ஒரே மகள் திருமதி ஜான்சி ஏசடியான் குடும்பத்துடன் திருச்சியில் வசித்து வருகிறார்கள் திரு ஏசு டியான் அவர்கள் ஒரு சிறந்த மனிதராக , மனித நேயம் ,ஏழைகள் மேல் கரிசனை , சிறுபான்மை மக்களின் உரிமை , கல்வியில் பின்தங்கிய பிள்ளைகளுக்கு சிறப்பு கவனம் , கலை ,நாடகம், இவற்றின் மூலமாக சமுதாய பணி போன்றவற்றை மிகச் சிறப்பாக திருச்சி மாநகர மக்கள் மனதில் சிறப்பான இடம் பெற்று தன் 76 ஆம் வயதில் 18-10-24 அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்கள் . திரு MRP இயேசு அடியான் அவர்களின் இரண்டாவது நினைவு நாளில் ஐயா அவர்களின் நல்ல வாழ்வுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லுவோம் .அவர் விட்டு சென்று இருக்கின்ற குடும்பத்தின் மக்களை கடவுள் வழி நடத்த வேண்டும் என இறை வேண்டுதல் செய்வோம் .